About the Journal
தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல் இதழின் நோக்கம் மற்றும் வழிகாட்டுதல்கள்:
தமிழ் சைக்கியாட்ரி மாத இதழானது, மனநல மருத்துவத் துறையில் ஏற்படுத்தியிருக்கும் ஒரு திருப்பு முனையாகும். சைக்கியாட்ரிக் ஜர்னல் இதழின் முக்கியத்துவமே, இங்கு அறிவியல் வார்த்தைகளின் துணையோடு எளிதாக படிப்பதற்கும், அதனை இன்னும் நிபுணர்களின் தரவுகளோடு இணைப்பதே முழுமுதற் எண்ணமாக வைத்திருக்கிறோம்.
மனநல அறிவியல் கட்டுரைகளை தமிழில் வாசிப்பதினால், அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை ஆழமாகவும், முழுமையாகவும், எளிதாகவும் புரிந்து கொள்ள முடியுமேயானால், அதை வாசிப்பவர்களை மேலும் வாசிக்கத் தூண்டுவதோடு, படைக்கவும் தூண்டும் என்பதில் ஐயமில்லை. அறிவியல் அறிவு ஆங்கிலம் தெரிந்தவர்களை மட்டுமே சென்றடைந்த காலம் இனி மாறி, அனைத்துத் தரப்பினரையும் மனநலத் துறையின் மகத்தான வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது அவா.
மனநல மருத்துவர்கள் மட்டுமில்லாது, உளவியல் நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் சமூகநலப் பணியாளர்கள் என அனைவருக்கும் இணைப்பாகவும், பாலமாகவும் இருப்பதே இந்த மருத்துவ நாளிதழ் செய்ய வேண்டிய அடிப்படைக் கடமையாக நாங்கள் கருதுகின்றோம்.
அதனை வெகு நேர்த்தியாகவும், நேர்மையாகவும் பல மனநல மருத்துவர்கள், நிபுணர்கள் தங்களின் துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை மிக எளிமையான மொழியில் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு இதழும் இதே போல் மருத்துவர்களுக்கும், உளவியல் நிபுணர்களுக்கும், மாணவர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் உதவும் வகையில் தமிழ் சைக்கியாட்ரிக் ஜர்னல் அமையும் என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
Tamil Psychiatry Journal is the first medical and scientific Journal in Tamil Language. It is a peer reviewed online medical journal published quarterly. Medical journals in the Tamil language will be a milestone in the field of Psychiatry as this will be a good new initiative to encourage medical fraternities to come out with original thoughts from within. We hope that this medical journal in Tamil language would encourage others to read and write medical related scientific contents in their mother tongue. We believe that learning and creating scientific research articles in one’s own language will create more interest and passion and enable others to understand the scientific contents more easily.
We hope that scientific content in Tamil language will help not only the Psychiatrists but also other mental health care professionals like Social workers, Psychologists and Psychiatric Nurses to understand Psychiatry and Psychology in depth.
JOURNAL PARTICULARS
Title | Tamil Psychiatry Journal |
Frequency | Quarterly |
ISSN | Processing |
Publisher | Aram Hospital |
Chief editor | Dr. Magesh Rajagopal |
Copyright | Aram Hospital |
Starting Year | 2025 |
Subject | Medical Sciences (Psychiatry and Neurology) |
Language | Tamil |
Publication Format | Online |
E-mail id | tamilpsychiatrymagazine@gmail.com |
Website | https://tpj.aramhospital.com/ |
Address | No.21, 4th Cross Street, Ramalinga nagar-South, Vayalur Road, Tiruchirappalli, Tamil Nadu, 620017. |
Mobile Number | +91 82707 23371 |